வாலிப நண்பனே!

 

வாலிப நண்பனே கவனிஉன்

சிருஷ்டி நாயகரின் செய்தி கேளு  - 2

இளவயதும் வாலிபமும்

மாயையாக ஓடிப்போகுமே !

 

                நீ மனந்திரும்பு - இன்றே மனந்திரும்பு (2)

 

உலக சந்தோஷம் நீ நாடாதே

இதய பூரிப்பில் நீ மயங்காதே (2)

சிற்றின்பம் உன்னை சிறைப்பிடித்து அழிக்கும்

சிந்தித்தே நீயும் இயேசுவண்டை ஓடி வா (2)

                                                                                                                - வாலிப நண்பனே

 

உன் கண்ணின் காட்சியில் நீ நடக்காதே

உன் நெஞ்சின் வழிகளில் நீ போகாதே (2)

பாவத்தின் வழியுன்னை பாதாளம் சேர்க்கும்

பரிசுத்த ஜீவ வழி இயேசுவண்டை ஓடி வா (2)

                                                                                                                - வாலிப நண்பனே

 

எந்தன் தோழனே உந்தன் இயேசுவை

நல்ல நண்பனாய் ஏற்றுக் கொள்வாயா? (2)

உந்தன் ஆயுளின் இறுதிவேளை வரைக்கும்

உந்தன் கூடவே இயேசு என்றும் இருப்பார் (2)

                                                                                                                - வாலிப நண்பனே